Seed Certification
விதை நேர்த்தி
விதைகளின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தை மேம்படுத்தும் இரசாயன நேர்த்தி முறைகள்

விதைகளை உரங்கள், வைட்டமின்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் போன்றவற்றில் நனைத்து / நேர்த்தி செய்வது.

எடுத்துக்காட்டு
நெல்

விதைகளை 1 சதவிகிதம் கேசிஎல் (பொட்டாசியம் குளோரைடு) கரைசலில் 12 மணி நேரம் ஊறவைப்பது முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தை அதிகரிக்கும்.

சோளம்

விதைகளை சோடியம் குளோரைடு (1 சதவிகிதம்) அல்லது பொட்டாசியம் டை ஹைட்ரஜன் ஆர்த்தோ பாஸ்பேட் (1 சதவிகிதம்) கலவையில் 12 மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.

பயறு வகைகள்
     
விதைகள் துத்தநாக சல்பேட்,  மக்னீசியம் சல்பேட் மற்றும் மாங்கனீசு சல்பேட் 100 பிபிஎம் கரைசலில் 4 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

Updated On: Jan, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam